பி.டி.ஐ பக்றீரியாக்களை வான் வழியாக தூவ நடவடிக்கை
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பி.டி.ஐ பக்றீரியாவை வான்வெளியாக தூவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அதன் காரணமாக பொதுமக் களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித் துள்ளார்.
எதிர்வரும் 3 ம் திகதி பி.டி.ஐ பக்றீரியாக்களை வான் வழியாக தூவும் நடவடிக்கைக் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கியுபாவிற்கு விஜயம் மேற்கொண்;ட விசேட பேச்சுவார்த்தைக்கமைய கியுபா விலிருந்து பி.டி.ஐ பக்றீரியா இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளாத அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட சேரிப்புறங்கள், சன நெரிசல் மிக்க பிரதேசங்கள் என்பவற்றில் பீ.டி.ஐ பக்றீரியாவை தூவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment