Thursday, September 6, 2012

ஒபாமாவுக்காக வோட்டு கேட்டும் அவரது மனைவி எதிர்கட்சி வேட்பாளரை சரமாரியாக தாக்கியுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும், குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோம்னி, சாதாரண மக்களால் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத," மேல்தட்டு மனிதர்"என, ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்சேல், விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில், குடியரசு கட்சி சார்பாக, இப்பதவிக்கு, மிட் ரோம்னி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக கட்சி சார்பாக, சார்லட் நகரில், நேற்று, மூன்று நாள் மாநாடு ஆரம்பமானது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தலைவர்கள், எதிர்க்கட்சி வேட்பாளரை, சரமாரியாக தாக்கி பேசியுள்ளனர்.

இம்மநாடடில் கலந்து கொண்ட் ஒபாமாவின் மனைவி மிச்சேல் தெரிவித்துள்ளதாவது, குடியரசுக் கட்சி சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரை, யாரும் எளிதில் தொடர்பு கொள்ள முடியாது என்றும், அவர் ஒரு மேல்தட்டு மனிதர் என்றும், மாசாசூட்ஸ் மாகாண கவர்னராக இருந்தபோது மக்களுக்காக எதையும் செய்யாதவர் என்றும், அவரது வங்கிக் கணக்கில் பல குறைபாடுகள் உள்ளன என்றும், அமெரிக்க மக்கள் நம்பிக்கை வைக்கத் தக்க தலைவர், எனது கணவர் ஒபாமா மட்டுமே எனவும், அவருக்கு ஆதரவு தரவேண்டும் என ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்சேல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செலுக்கு பின்னர், பேசிய பல தலைவர்களும், ரோம்னியை விமர்சித்தனர். அதிபர் தேர்தலில் "யாருக்கு வெற்றி" என்று இதுவரை, நடத்தப்பட்ட முன்னோட்ட கருத்துக் கணிப்புகளில், இரு கட்சித் தலைவர்களுக்கும், கிட்டத்தட்ட சம வாய்ப்பு ஆதரவு பெற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனால், ரோம்னிக்கு எதிராக, ஜனநாயக கட்சி தலைவர்கள் கடுமையான சாடல்களை அதிகரித்து வருகின்றன.

No comments:

Post a Comment