கைதாக வைக்கோவிற்கு மாலை! இந்திய பொலிஸாரின் இரட்டைவேடமா?
மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய பிரதேச வருகைக்கு எதிராக போராட்டம் நடத்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுடன், மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசம் சென்ற வைகோ குழுவினரை, மகாராஷ்டிரா மத்திய பிரதேச மாநில எல்லையான சிந்த்வாரா பந்துர்னா அருகில் உள்ள, கட்சிகோலி என்ற இடத்தில் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
அதனையடுத்து 40 மணிநோரம் காத்திருந்த வைகோ குழுவினர், சிந்த்வாராவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின உருவ பொம்மையை எரித்துவிட்டு, மீண்டும் சாஞ்சி நோக்கி தமது குழுவினருடன் புறப்படத் தயாரான போது, மத்திய பிரதேச மாநில பொலிஸார் வைகோ குழுவினரை கைது செய்து மத்திய பிரதேசத்துக்கு பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள திருமண மண்டபத்தில் வைகோ குழுவினரை அடைத்து வைத்தனர்.
இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சாஞ்சியில் நிர்மாணிக்கப்படவுள்ள பௌத்த பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல்லை நாட்டி, மத்திய பிரதேசத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றதும், பாரதீய ஜனதா ஆட்சியில் உள்ள அம்மாநில பொலிஸார் வைகோவிற்கு மாலை அணிவித்து வழியனுப்பி வைத்துள்ளனர்.
இது இந்திய பொலிஸாரின் இரட்டைவேடமா? அல்லது வைகோ குழுவினரால் எந்தவித அசம்பாவிதத்தையும் ஏற்படத்த முடியாது என்பதை தெரிவிக்கும் மாலையா?
.
1 comments :
ஓன்று மட்டும் உண்மை, வைகோ , சீமான், நெடுமாறன், திருமாளவன் போன்ற போக்கிரி கோமாளிகள், தமிழ் நாட்டு மக்களும் கோவணத்துடன், நடுத்தெருவில் நிற்கும் நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு தலையில் கொத்து வாங்கி, நிர்வாண சாவு என்பதே என்றதை மறந்து விட்டார்கள் போலும்.
Post a Comment