போன், சிம் தொலைந்தால் உடனே இணைப்பைத் துண்டிக்கவும்.
அண்மையில் பொலிஸ் மற்றும் வீசேட அதிரடிப்படையினர் சேர்ந்து வெலிக்கடைச் சிறைச்சாலையில் நடாத்திய தேடுதலில் பல கைத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் மற்றவர்களின் சிம்மைப் பயன்படுத்தி கப்பம் கேட்டல், அச்சுறுத்துதல், மற்றும் பெண்களிடம் அசௌகரியமாகப் பேசுதல் போன்ற பல்வேறு குற்றச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
எனவே, தமது கைத்தொலைபேசியோ, சிம்மோ தொலைந்து போனால் உடனடியாக தொலைபேசி வழங்குநர்களுடன் தொடர்புகொண்டு அதன் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் எனவும், அப்படிச் செய்யாதவர்கள் அதன் பின்விளைவு களுக்கு பொறுப்பாளியாவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment