கிழக்கு மாகாண சபை நாளை கூடுகிறது. பிரசன்னாவிற்கு பயத்தில் வயிற்றை கலக்குதாம்!!
கிழக்கு மாகாண சபைபின் முதலாவது அமர்வு நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்றது. நாளைய அமர்வு தொடர்பாக பேரவைச் செயலாளரினால் சகல உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரை, சபை தவிசாளர் மற்றும் பிரதி தெரிவு ஆகியனவே நாளைய அமர்வின் நிகழ்ச்சி நிரல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபை ஆட்சியை பிப்பதற்கு எங்களுக்கு வாக்களியுங்கள் மலையை பிடிங்கி மாமரத்தில் சாத்திக்காட்டுகின்றோம் எனக்கூச்சலிட்ட தேசியக் கூட்டமைப்புக்கார் எமக்கு பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் என தமது பணியை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன இந்திரகுமார் இது தொடர்பாகத் தெரிவிக்கையில்;
'மாகாண சபை உறுப்பனர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொலிஸ் பாதுகாப்பு தேர்தல் முடிந்து மூன்று வாரங்கள் கடந்தும் வர்தமானியில் பெயர்கள் பிரகடணம் செய்யப்பட்டு ஒரு வாரம் கடந்தும் இதுவரை வழங்கப்படவில்லை
இதன் காரணமான நாங்கள் பொலிஸ் பாதுகாப்பு இன்றியே நாளைய மாகாண சபை அமர்விற்கு செல்லவிருக்கிறோம்.
மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் கூட தான் உட்பட கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிய நிலையில் பாதுகாப்பின் நிமித்தம் வேறு இடங்களில் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை கூட ஏற்பட்டது. அப்படியிருந்தும் எமது பாதுகாப்பு குறித்து உரிய தரப்பு கவனம் செலுத்துவதாக இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பதனாலே இந்த பாகுபாடு என நாம்
கருதுகிறோம்.
இதனை எமது கட்சித் தலைவர்கள் பொலிஸ் உயர்மட்டத்தின் கவனத்திற்கு அறிவித்தும் கூட இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது பற்றி இதுவரை சாதகமான பதில் முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை' என்றும் பிரசன்னா இந்திரகுமார் மேலும் குறிப்பிட்டார்.
பிரசன்னாவின் மேற்படி கருத்து தொடர்பாக இலங்கைநெற் அவரை தொடர்பு கொண்டு :
பாதுகாப்பு எதற்காக எனக்கேட்டபோது..
மற்றவர்களுக்கும் கொடுத்திருக்கின்றார்கள் அதற்காகத்தான் என்றார்..
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற கோஷத்துடன் நிற்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நீங்கள் மற்றவர்கள் போல் பொலிஸ் பாதுகாப்புடன்தான் மக்கள் மத்தியில் செல்லவேண்டுமா என்று கேட்டபோது:
நான் நிற்கின்ற இடத்திலிருந்து தற்போது பேச முடியாது 30 நிமிடங்களில் எடுங்கள் என்றார்.
30 நிமிடங்களின் பின்னர் சுமார் முப்பது தடவைகள் அழைப்பை எற்படுத்தினோம் பெரியவர் ரெலிபோனை தூக்குவதாக இல்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக முழு அளவிலும் இல்லாவிட்டாலும் தமிழர் தரப்பின் கையிலிருந்த மாகாண சபை தற்போது கைமாறியுள்ள நிலையில் தமிழ் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்ய என்ன வழிகளை கையாளப்போகின்றனர் என்ற திண்டாட்டத்தில் இருக்கும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே பணியை ஆரம்பித்துள்ளனர்.
முதலாவது பொலிஸ் பாதுகாப்பு : பின்னர் வரியற்ற வாகனம் .. இவ்வாறு எண்ணற்ற தேவையைகள் யாவும் பூர்த்தி செய்யப்படும்.
வடகிழக்கிலே பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது, தமிழ் மக்களே எமக்கு வாக்களியுங்கள் அவர்களை இங்கிருந்து விரட்டுகின்றோம் என்றவர்கள் தற்போது பாதுகாப்புக்கு மேலதிக பொலிஸ் அதிகாரிகளை கிழக்குக்கு கொண்டுவாருங்கள் என்கின்றார்கள்.
மேலும் பயத்தின் காரணமாக சிலகாலம் ஒழிந்து இருக்கவேண்டிய தேவையும் இருந்தாக வேறு பிரசன்னா கூறியிருக்கின்றார்.. இப்படி பயம் உண்டானால் ஏன் கதிரையை சூடாக்கவேண்டும் பயமற்ற, ஓடிஒழிய மாட்டாத, மக்களுடன் மக்களாக நிற்கக்கூடியவர்களிடம் கொடுத்துவிட்டு செல்லலாம்.
இதில் வியப்புக்கு உரிய விடயம் யாதெனின் இந்திய இராணுவத்தினருடன் இணைந்து பிள்ளை பிடித்தபோது பிரசன்னாவை கண்டு மக்கள் ஓடிய காலம்போய் இன்று பிரசன்னா ஒடிஒழிய காலம் வந்திருக்கின்றது.
1 comments :
மூதேவிகள் இவ்வளவு காலமும் தமிழினத்தை அழித்து, தமிழ் மண்ணையும் அழித்து, மிஞ்சியவர்களை கோவணத்துடன் நடுத்தெருவில் விட்டு விட்டு இப்போ போலிஸ் பாதுகாப்பு வேண்டுமாம். பரதேசி கூட்டணி நாயிகளை அம்மணத்துடன் நடுத்தெருவில் விட்டு செருப்பு மாலை போட்டு , விளக்குமார், தும்புத்தடியால் அடித்து நரகலோகம் அனுப்ப வேண்டும்.
தமிழ் மக்களே கிளம்புங்கள். இனியும் பொறுமை வேண்டாம்! தாமதம் வேண்டாம்.!
புலிகளுக்கும், கூட்டணிக்கும் பரிகாரம் செய்த எவனையும் வீடு வைக்க வேண்டாம்!
Post a Comment