Tuesday, September 4, 2012

ஜப்பான் சமுத்திர பாதுகாப்பு படைப்பிரிவின் கப்பல்கள், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன

ஜப்பான் சமுத்திர பாதுகாப்பு படைப் பிரிவிற்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. நட்புறவு ரீதியிலான விஜயத்தை மேற்கொண்டு, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இரு கப்பல்களும், கடற்படையினரின் சம்பிரதாயங்களுக்கு அமைய வரவேற்கப்பட்டுள்ளன.

அரேபிய கடலில் கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டதை தொடர்ந்து, இக்கப்பல்கள், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் இரு கப்பல்களிலும் 200 பணியாளர்கள் அடங்குவதாக, இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. I'm not an expert when it comes to this. Didn't even know this was possible. Useful read, appreciate your posting this.

    ReplyDelete