Thursday, September 13, 2012

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் வீட்டுக்காவலில்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கூட்டமைப்பில் வெற்றிபெற்றுள்ள தமது உறுப்பினர்கள் எங்கே அரசாங்கத்தோடு சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமாகவே அவர்கள் எல்லோரையும் திருகோணமலைக்கு வரவழைத்து சம்பந்தன் ஒரு வீட்டிலே வைத்துப் பூட்டிவைத்துள்ளார்.

தமது கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மீதே சந்தேகம் கொண்டுள்ள இவர்கள் இவ்வாறு அவ் உறுப்பினர்களை பூட்டிவைத்து சித்திரவதை செய்யப்படவதை தாம் விரும்பவில்லையென வெற்றிபெற்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

எம்மீது நம்பிக்கை இல்லாது கட்சியின் உயர்பீடம் எமக்கு எச்சரிக்கை செய்து, சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது தமது தன்மானத்திற்கே இழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இப்படி கூட்டமைப்பு நடக்கும் என்று தெரிந்திருந்தால் பேசாமல் அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்திலே கேட்டிருக்கலாம் போல் தோன்றுகின்றது. என இன்னும் ஒருவர் தொலைபேசிமூலம் ஆதங்கப்பட்டார். தமிழ் மக்களைப் பாதுகாக்கவென வீராப்பு பேசும் தமிழ் கூட்டமைப்பு இன்று தமது உறுப்பினர்கள் எங்கே அரசோடு சேர்ந்துவிடுவார்களோ என்ற பயத்தில் அவர்களைக் கண்காணிக்கின்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை என்னவென்று சொல்வது?

இந்நிலைமைகள் தொடர்பில் கட்சியின் பேச்சாளர் எனச் சொல்லப்படுகின்ற சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் கேட்டபோது இவைதொடர்பின் சம்பந்தனை தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசியை இணைப்பதை துண்டிக்கின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com