கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீட் சத்தியப் பிரமாணம்!
கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான, நஜீப் ஏ. மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் இவர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது பற்றி கருத்துத் தெரிவித்த நஜீப் ஏ. மஜீட் எனது தந்தை 17 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் சேவையாற்றிவர் நான் 13 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். தற்போது முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன் என்னை இப்பதவியில் அமர்த்திய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment