Tuesday, September 18, 2012

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் பிரதி நிதிகள் இன்று முல்லைத்தீவிற்கு செல்கின்றனர்

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பிரதிநிதிகள், இன்று முல்லைத்தீவில் மீள் குடியேற்றங்கள் இடம்பெற்ற பகுதிகளுக்குச் செல்லவிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இக்குழுவினருக்கு, யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும், அபிவிருத்திப் பணிகள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், போன்ற விடயங்கள் குறித்தும், யாழ் மாவட்டத்தின் பிந்திய நிலைவரங்கள் குறித்தும் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி விளக்கமளித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குழுவில், ஆசிய, பசுபிக், மத்திய கிழக்கு, வடஅமெரிக்க பிரிவுக்கான பொறுப்பாளர் ஹன்னி மெகாலி, மற்றும் சட்ட ஆட்சி ஜனநாயகத் தெரிவுகளுக்கான மனித உரிமைகள் அதிகாரி ஒஸ்கார் சொலேரா ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com