முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா யாழ் விஜயம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அவ் விஜயத்தின் போது, யாழ் நநகரிலுள்ள நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். அத்துடன், நாகவிகாரை, நாகதீபம் ஆகிய இடங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதாகவுமம் தெரிகிறது.
ஏ -9 ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்த முன்னாள் ஜனாதிபதி சந்;திரிகா யாழ்ப்பாணத்தின் மணியம் தோட்டப்பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் பல்வேறு மதத்தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, அரியாலை கிழக்கில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வதாதார நிலமைகளை குறித்து ஆராய்ந்துள்ளதுடன், மேர்சி மலேசியா நிறுவனத்தினரால் அரியாலை கிழக்கு மற்றும் நாவலடி மீள்குடியேற்றற மக்களுக்கு வழங்கிய சோலர் இயந்திரங்களின் பயன்பாடுகள் பாவனை காலங்கள் குறித்தும் சந்திரிகா விளக்கங்களைக் கேட்டறிந்துள்ளார்.
தரைவழியாக முதல் தடவையாக சந்திரிகா யாழ் சென்றமை முதல் தடவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment