பள்ளிவாசலில் அன்று இடம்பெற்ற சோகமான சம்பவம் இனி இடம்பெற முடியாது.
முஸ்லிம் பள்ளிவாசல்களை நாம் எப்போதும் பாதுகாப்போம் இது சத்தியம் என்றும், இனவாதம், மத பேதம், சொல்லி சிலர் வாக்கு கேட்க முயற்சி செய்கிறார்கள் அவ்வாறு செய்யவேண்டாம் என எல்லா அரசியல் கட்சிகளையும் நான் கேட்டுக் கொள்கின்றேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மட்டு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் நிறுவப்பட்டுள்ள இலங்கையின் நான்காவது சுரங்கப்பாதையை நேற்று பிற்பகல் திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இவ்வளவு காலமும் நீங்கள் பட்ட கஷ்டம், வேதனை எல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். காத்தான்குடி பள்ளிவாயலில் அன்று இடம்பெற்ற சோகமான சம்பவம் இனி இடம்பெற முடியாது, அந்த நிலைமை இல்லை. பயமில்லாமல் நிம்மதியாக, பாதுகாப்பாக வாழமுடியும என தெரிவித்துள்ளார்.
அத்துடன் நவோதய திட்டத்தின் மூலம் உங்கள் பகுதி முன்னேறிவருகின்றது எனவும், உங்கள் பிள்ளைகளுக்கு நிச்சயமாக நல்ல எதிர்காலம் உண்டு அது குறித்து நாம் சந்தோசப்படுகின்றோம் என்றும், அத்துடன் இப்பகுதியில் புதிய பள்ளிவாயல் கட்ட நாம் அத்திவாரம் போட்டுள்ளோம் என்றும், சிங்கள- தமிழ் -முஸ்லிம் என்ற இன ரீதியான அரசியல் நோக்கம் வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
நாம் எல்லோரும் ஒரே இலங்கைத்தாய் மக்கள். எல்லோருக்கும் ஒரே விதமான சம உரிமைகள் தான். உங்கள் நகரம் முன்னேற வேண்டும். அதே போல் உங்கள் மாகாணமும் முன்னேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment