இலங்கையர்கள் மோசடிகளில் ஈடுபடுகின்றனர் - நோர்வே.
இலங்கை, இந்தியா, மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலிருந்து தொழில் தேடுபவர்களில், பெரும்பாலானோர் மோசடிகளில் ஈடுபடுவதால் அந்நாட்ட வர்களுக்கு தற்காலிக வதிவிட அனுமதிப்பத்திரம் வழங்குவதைத் தடுப்பதற்கு நோர்வே முடிவு செய்துள்ளது.
குறிப்பிட்ட 3 நாடுகளில் உள்ள நோர்வே தூதரகங்களின் கருத்துக்களின் அடிப்படையிலேயே நோர்வே இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. வலிதான ஆவணங்களும், உரிய தகைமையும் இருப்பின், ஐரோப்பிய ஒன்றியத்தினைச் சாராத வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு தொழில் தேடுவதற்க்காக 6 மாதகால தற்காலிக விசா வழங்கும் நடைமுறையை 2010 ல் நோர்வே அறிமுகப்படுத்தியது.
2012 ல் முதல் 6 மாதங்களில், இந்த 3 நாடுகளிலும் இருந்து சராசரியாக 1000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது என்றும், ஆனால், சிலர் தங்களது வதிவிடம் பற்றிய தகவலை நிரப்புவதில் பொய்யான தகவலைத் தருகின்றனர் என்று, நோர்வே தூதரகத்தினர் கருதுவதாக "ஆவ்டன்போஸ்டன்" என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த விண்ணப்பங்களில் 100 பேர் ஒஸ்லோவின் மத்தியில் உள்ள ஒரு முகவரியைக் கொடுத்துள்ளனர் என்றும், தவறுதலாக வதிவிட முகவரி கொடுக்கப் பட்டுள்ளதாக கூறுவதில் ஆதாரமில்லை என்றும், இது திட்டமிட்டு செய்த மோசடி என்று தெரிகின்றது என்று, நேர்வே தொழில் அமைச்சர் ஹன்னே பிஜர்ஸ்ரம் தெரிவிக்கின்றார்.
பயிற்சி பெற்ற தொழிலாளரின் தேவையை நாடும் நோர்வே, தொழில் வழங்குனர்களின் விருப்பத்தை எவ்வாறு நிறைவு செய்ய வேண்டும் என்றும், நேர்மையான விண்ணப்ப தாரிகளைப் எவ்வாறு பிரித்தெடுத்தல் என்பதில் ஒரு மதிப்பீடு செயப்படுகின்றது என்றும், தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment