சம்பந்தனால் தமிழர்கள் தமது பலத்தை இழந்து நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும்
தமிழ் முதலமைச்சர் பதவி பறிபோனது மட்டுமல்லாமல், ஒரு தமிழருக்கேனும் அமைச்சர் பதவியும் கிடைக்காது போனதற்கு சம்பந்தனே காரணம் -வணசிங்க
தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் அல்ல. அவர்கள் இந்திய மத்திய அரசாங்கத்தின் அடிமைப்பட்ட பிரதிநிதிகளாகவே செயற்படுகின்றனர் எனவும், இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பால் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்றும், தமிழ் முதலமைச்சர் பறிபோனதிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனே காரணம் என்றும், இந்தியாவையும், புலம்பெயர் புலிகளையும் சந்தோஷப்படுத்தும் நிகழ்ச்சி நிரலையே அவர் செய்கின்றார் எனவும், ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய செயற் குழு உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான நிஷாந்த ஸ்ரீ வணசிங்க அதனை தெரிவித்துள்ளார்.
த.தே.கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், த.தே.கூட்டமைப்பு டெல்லிக்கு காவடி எடுப்பதால் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று இந்தியாவின் ஏகபிரதிநிதிகளாக மாறியுள்ளனர் என்றும், தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இலங்கை அரசாங்கத்துடன் தான் போச வேண்டும், அவ்வாறு செய்யாமல் இந்தியாவிற்கு காவடி எடுப்பதால் எந்த ஒரு தீர்வும் தமிழர்களுக்கு கிடைக்காது என்றும், இலங்கைத் தமிழர்களை இந்தியாவின் அரசியலுடன் இணைப்பது பயங்கரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே த.தே கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டது, அவர்களின் அச்செயற்பாட்டால், தமிழ் முதலமைச்சர் பதவி பறிபோனது மட்டுமல்லாமல், ஒரு தமிழருக்கேனும் அமைச்சர் பதவியும் கிடைக்காது போனது. இவ்வாறு தமிழ் மக்கள் கிழக்கில் பலம் இழந்து நடுத் தெருவில் விடப்பட்டுள்ளார்கள். மாறாக முஸ்லிம் மக்கள் சமூகம் பலம் அடைந்துள்ளார்கள், எதிர் காலத்தில் தமிழ் மக்கள் மேலும் மேலும் தங்களின் பலத்தை இழந்து நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்படும். இவ்வாறு ஏற்படுவதற்குரிய முழுப்பொறுப்பையும் சம்பந்தனே ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடாது பிள்ளையானுக்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தால், தமிழ் முதலமைச்சர் பதவி பறிபோயிருக் மாட்டாது ஆகவே இந்தியாவின் அடிமைகளாக இந்தியாவுக்கு காவடியாடாமல் இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதுடன், பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்க வேண்டும் எனவும், இதன் தமிழர்களின் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காணமுடியும் என தெரிவித்துள்ளார்.
1 comments :
இதுகெல்லாம் காரணம் பிரபாகரன் தான் , இவன் தான் புத்திஜீவிகளை சிறுவர்களை வைத்த் கொலை செய்து சமூகத்தை மதிக்காத இளைஜோர் கூட்டத்தை உருவாக்கி சமூக விரோதிகளை உருவாக்கினான்.
எடுத்ததுக்கெல்லாம் மகிந்தரை குறை சொல்வதை விடுத்து தமிழர் தங்கள் தவறை , அதாவது புலிவால் பிடிப்பதை நிறுத்த வேண்டும்.
ஆர்யா
Post a Comment