Tuesday, September 4, 2012

இலங்கையில் சிறிய ரக பயணிகள் விமானங்கள் பாவனைக்கு - மகிந்திர குரூப்

இந்தியாவின் மகிந்திரா குரூப் நிறுவனமானது, இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற அண்டைய நாடுகளுக்கு தனது சிறியரக விமானங்களை உள்ளூர் மற்றும் சுற்றுலா சேவையில் ஈடுபடுத்த விருக்கின்றது என்று அதன் உயர் அதிகாரி ஸ்ரீபிரகாஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.

5, 8 மற்றும் 10 பேர் கொண்ட சிறிய குழுக்களை ஏற்றிச் செல்ல வசதியானதுடன், செலவு குறைந்தனவுமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மகிந்திரா குரூப்பின் விமானங்கள் கட்டும் பிரிவான மகிந்திரா ஏரோஸ்பேஸ் ஒற்றை என்ஜின் கொண்ட சிறியரக விமானங்களைத் தயாரித்துவருவதுடன், இந்த விமானங்கள் நன்றாகச் செப்பனிடப்படாத ஓடுபாதைகளிலும் தரையிறங்கக் கூடியவை என தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்திரா குரூப்பின் அவுஸ்த்திரேலியாவை தளமாகக் கொண்ட ஜிஏ 8 ஏயர்வேன் ஏற்கனவே இந்தியாவின் டெக்கான் ஏவியேசனுடன் இணைந்து அதன் முதலாவது விமானப் பயணத்தை இலங்கைக்கு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com