விமானப்படை வீரரின் சடலம் பம்பலப்பிட்டி கடற்கரையிலுள்ள கற்பாறைகளுக்கிடையில் மீட்பு
இரத்மலானை விமானப்படைத் தளத்தில் கடமையாற்றிய விமானப் படை வீரர் ஒருவர் பம்பலப்பிட்டி கடற்கரையில் உள்ள கற்பாறை களுக்கிடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் நேற்று முன்தினம் (02) விமானப் படைத்தளத்தில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், அதன் பின்னர் இவர் வரவில்லை என விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, குளிப்பதற்காகச் சென்றவேளை கடலில் மூழ்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு தனிப்பட்ட காரணங்களாக இருக்கக் கூடுமா? என ஆராய்ந்து வருவதாக விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment