மலம் வீசி நீதி மன்றத்தை அவமதித்தமைக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டணை.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச் சாட்டின் பேரில் ஒருவருக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி மாலினி குணரட்ன 5 ஆண்டு கடுங்காவல் தண்டணை விதித்து ள்ளார். ஆகஸ்டு 22 ம் திகதி சந்தேக நபரான, தங்கொட்டுவை போதியாபுரவைச் சேர்ந்த ஜயசூரிய குருனாகே சுதத் நிலந்த என்பவர், மானபங்கப்படுத்தல் வழக்கொன்றிற்காக கொண்டுவரப்பட்ட போது நீதிபதியை நோக்கி மலப் பொதியை வீசுயுள்ளார்.
சந்தேக நபர் குற்றத்தை ஒத்துக் கொண்டதால், அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டணையும், 50,000 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது. தண்டப் பணத்தைக் கட்டத் தவறின் மேலும் 6 மாதம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று தீர்க்கப்பட்டது.
தடுப்புக் காவலில் நீண்டகாலம் இருந்த போது தனக்கு செய்யப்பட்ட சித்திரைவதைகள் காரணமாகவே அவ்வாறு நடந்து கொண்டதாக அவருக்காக வாதாடிய சட்டத்தரணி ருவான் பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment