கல்குடாவிலும் அமெரிக்காவுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களை நிந்திக்கும் வகையில் வெளியிடப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்குடாத் தொகுதியில் கர்த்தால் அனுஸ்டிக்கப் பட்டதுடன், ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் எதிர்ப்பு பேரணியும் இடம் பெற்றது.
கல்குடாத் தொகுதி உலமா சபை, அனைத்து பள்ளிவாயல்களின் நிருவாகிகள், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை வர்த்தக சங்கங்கள், ஆட்டோ சங்கங்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் என்பன ஒன்று சேர்ந்து கர்த்தாலையும் எதிர்ப்புப் பேரணியையும் ஏற்பாடு செய்திருந்தன.
நேற்றுஜூம்ஆத் தொழுகையின் பின்னர் வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீறாவோடை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, காவத்தமுனை, மாஞ்சோலை, செம்மண்ஓடை ஆகிய பிரதேசங்களில் இருந்து வந்த எதிர்ப்புப் பேரணிக் காரர்கள் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்திற்கு வந்து அமெரிக்க நாட்டுக் கொடி மற்றும் கொடும் பாவிகளையும் எரித்தனர்.
நேற்று கல்குடாத் தொகுதியில் உள்ள தமிழ் முஸ்லீம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன் முஸ்லீம் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்கள் என்பன மூடப்பட்டிருந்தன.
0 comments :
Post a Comment