காலி மேயரை கைது செய்க - வைத்தியர்கள் கோரிக்கை
காலி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க வைத்தியர்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மா னித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வைத்தியர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் காலி மேயரை கைது செய்யக் கோரியே இப்பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக அரசாங்க வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் எனவும், அச்சுறுத்தல் கொடுத்ததற்காக மாத்திரம் ஒருவரை கைது செய்ய முடியாது எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment