இலங்கையின் முப்படைகளின் கூட்டுப் பயிற்சி வாகர-தொப்பிகலவில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் முப்படைகளின் கூட்டுப் பயிற்சி மூன்றாவது முறையாக எதிர் வரும 9ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை தொப்பிகலவில் இடம்பெற வுள்ளது எனவும், இந்த கூட்டுப் பயிற்சிகளில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளைச் சேர்ந்த 2200 முப்படை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக இராணுவத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாகிஸ்தான், பங்களாதேஷ், மற்றும் மாலைதீவு ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட இராணுவக் குழுக்கள் இந்த கூட்டுப் பயிற்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதுடன், இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, ஜப்பான், ஈரான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் தூதரகங்களின் இலங்கைக்கான பாதுகாப்பு இணைப்பதிகாரிகள் மேற்பார்வையாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
முப்படைகளின் கூட்டுப் பயிற்சி தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment