தடை உத்தரவினாலோ, தமிழ் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களினாலோ உறவில் பாதிப்பில்லை
அரசாங்கத்தால் பிறப்பிக்கப்ட்ட தடை உத்தரவினாலோ அல்லது தமிழ் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களி னாலோ, இலங்கை-இந்திய உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
புதுடில்லிக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாட் காரியவசம் தெரிவித்த கருத்தில் தமிழ் நாட்டில் இலங்கையர்களுக்கு எதிராக இடம்பெற்றவந்த சம்பவங்களினால், இலங்கை இந்திய நட்புறவில் எந்தவித விரிசல்களும் ஏற்படாது எனவும் விடுதலைப்புலி ஆதரவு தமிழ் கட்சிகளின் செற்பாட்டாளர்களால், தஞ்சாவூரில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வணக்கவழிபாட்டிற்காக சென்ற 184 இலங்கையர்கள் தாக்கப்ட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் தமிழ் நாட்டு பொலிஸாரின் பாதுகாப்புடன் பஸ்களில் விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட அவ் யாத்திரிகைகள், மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு தமிழ் நாட்டு பொலிஸாருக்கு இந்திய மத்திய அரசு அறிவித்திருப்பதாகவும், மறு அறிவிப்பு வரை இலங்கையர்கள் தமிழ் நாட்டிற்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும், அத்தியாவசிய காரணங்களுக்காக தமிழ் நாட்டிற்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், முன்பதாக சென்னையிலுள்ள பிரதி உயர்ஸ்தாகியக அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment