பிரித்தானிய இளவரசர் ஹரி, தாக்குதல் ஹெலிகாப்டர்களை செலுத்த ஆஃப்கானிஸ்தான் செல்கிறார் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அறிவித் துள்ளது. தலிபான்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு நேட்டோ நாடுகளின் படைகளுடன் பிரித்தானிய படைகளும் அங்கு யுத்தம் புரிகின்றன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் "பார்ட்டி" கொண்டாட்டங்களில், நிர்வாண போட்டோக்கள் வெளியானதில், சர்ச்சைகளில் சிக்கியிருந்த இளவரசர் இப்போது யுத்தத்துக்கு செல்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2008-ல் இளவரசர் ஹரி, ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படைகளுடன் இணைந்து போர் புரிய சென்றிருந்தார். அப்போது ஆப்கானிஸ்தானில் அவரது பணி, தரை விமானக் கட்டுப்பாட்டு மையத்தில், on-ground air controller ஆக இருந்தார்.
இம்முறை, நிஜமாகவே தலிபான்களின் தாக்குதல் நடக்கும் இடங்களுக்கு பறக்க போகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் ஹரி செல்லப்போகும் பிரிட்டிஷ் ராணுவ முகாம், ஆப்கானிஸ்தானின் ஹெல்மான்ட் மாகாணத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் தலிபான்களின் நடமாட்டங்களும், தாக்குதல்களும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது
No comments:
Post a Comment