Thursday, September 20, 2012

இலங்கையர்கள் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோர வேண்டிய அவசியமில்லை- பிரித்தானியா

தஞ்சம் கோரியவர்கள், விரைவில் தமது சொந்த நாடுகளுக்கு திருப்பி யனுப்பப்படுவார்கள். இதற்கிணங்க 60 இலங்கையர் பிரித்தானியாவி லிருந்து இலங்கைக்கு நாடு கடத்த ப்படுகின்றனர்.

இலங்கையர்களுக்கு வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து தேவையில்லையெனவும், இலங்கை தற்போது அமைதிப்பூங்காவாக திகழ்வதாகவும், ஆகவே இலங்கையர்கள் எந்தவொரு நாட்டிலும் தஞ்சம் கோர தேவையில்லையெனவும், பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

30 வருட பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழித்த இலங்கை அரசாங்கம், இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களையும் சமமாக மதித்து வருவதாக, பிரிட்டன் தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கு இன்னல்கள் இழைக்கப்படுவதற்கான எதுவித ஆதாரங்களும் இல்லை. மக்கள் வாழக்கூடிய அமைதி சூழ்நிலை இலங்கையில் நிலவுகிறது எனவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது

அத்துடன் அனைத்து பகுதிகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுவதுடன், மக்கள் நலன்புரி நடவடிக்கைகளும், பரவலாக இடம்பெறுகின்றன. ஆகவே, எந்தவொரு இலங்கையரும், வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோர தேவையில்லையென, பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரிட்டனில் அகதி அந்தஸ்து கோரும் இலங்கையர்களை, திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை, பிரிட்டன் ஆரம்பித்துள்ளது. தஞ்சம் கோரியவர்கள், விரைவில் தமது சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்பப்படுவார்கள் என, பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க பிரித்தானியா மூன்று விமானங்களில் 60 இலங்கையர்களை நாடு கடத்தவுள்ளது அத்துடன், அன்நாடு கடத்தலால் எதிரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் என்பதனால், எந்த விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர் என்ற தகவலை அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com