எகிப்து புரட்சி போல இலங்கையிலும் நடத்தி ஆட்சியை கைப்பற்ற போகின்றாராம் சோமவன்ச
உலகில் உந்ந நாடுகளில் அதிகாரம் கைமாறுவது தேர்தல்கள் மூலம் அல்ல என்றும், ஜே.வி.பி தேர்தலில் தோற்றாலும் விரைவில் அரசை பதவியில் இருந்து விரட்டிவிட்டு ஆட்சியை ஜே.வி.பி கைப்பற்றும் என சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் இல்லாமல் அரசாங்கத்தை தேற்கடிக்கும் விதம் தொடர்பில் உலக நாடுகளிடம் இருந்து சிறந்த உதாரணங்கள் கிடைத்துள்ளதாகவும், எகிப்தில் முபாரக் இப்படியான முறையிலேயே விரட்டியடிக்கப்பட்டார் எனவும், இலங்கையிலும் இவ்வாறான புரட்சியே ஏற்படும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
எகிப்திலும் இவ்வாறே அனைத்து மக்களுக்கும் வீதியில் இறங்கி போராடி, முபாரக்கை பதவியில் இருந்து தூக்கினர் எனவும், இலங்கையிலும் இவ்வாறான சக்தி உருவாகப் போகின்றது எனவும், அப்போது அதில் புத்திஜீவிகளும், மக்களும், மாணவர்களும் அதில் அடங்கியிருப்பர் எனவும் அத்துடன் அவ்வாறான நிலை ஏற்படும் போது அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்றோம் என்பது போன்று கூறுவதில் பிரயோசனம் ஏற்பட போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்ப்பு வரும் விதத்தை பார்த்து கொண்டிருங்கள். பொது எதிர்க்கட்சி உருவாக்கப்படுவதில்லை ஜே.வி.பி பங்கெடுக்காது. சரத் பொன்சேக்காவுக்கு ஜே.வி.பிக்கும் புரிந்துணர்வு இல்லை. அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சிக்கு வரபோவது ஜே.வி.பிதான் எனவும், சிங்கள பத்திரிகை ஒன்று வழங்கிய பேட்டி ஒன்றில் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment