படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமசந்திர, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வட மத்திய மாகாண சபை தேர்தல் பிரச்சார இறுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அமைச்சர் மைத்திரிபால சிரிசேன, மற்றும் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஹிங்குரக்கொடையில் 5ம்திகதி நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவின் அழைப்பின் பேரில், ஹிருணிகா இக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்திருந்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகளில் உள்ள சிலர் என்னையும் சேர்த்துக் கொண்டு பொதுக் கூட்டமைப்பு உருவாக்கப் போவதாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை விட்டுவிட்டு வேறெந்த கூட்டமைப்பிலும் சேர நான் தயாரில்லை. அதனாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இந்த கூட்டதுக்கு வந்தேன் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் எனது தந்தை இரத்தம், வியர்வை சிந்தி பாதுகாத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மேலும் பாதுகாக்கும் பொருட்டு ஜனாதிதி மகிந்த ராஜபக்ஷவைப் பலப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
அவரின் தாயாரான ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் சுஜாதா பிரேமசந்திராவும் கூட்டதிற்கு வந்திருந்தார்.
No comments:
Post a Comment