தமிழ் அமைச்சர்கள் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய போகிறாராம் புதிய முதலமைச்சர்
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார் என தெரிவிக் கப்பட்டுள்ளது. இது தொடர்பான வைபவம் பிற்பகல் 2.30 மணிக்கு முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
திருகோணமலை உட்துறை முகவீதியில் முதலமைச்சரின் அலுவலகம் இவ்வைபவம் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் சர்வமதத் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை கிழக்கு மாகாண சபையில் தமிழ் அமைச்சர்கள் இல்லாத குறையை முதல் அமைச்சர் என்ற அடிப்படையில் தான் நிவர்த்தி செய்யவுள்ளதாக மாகாண முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment