அரசாங்கத்தின் செயற்பாடுகளே வெற்றிக்கு வழிகொடுத்தது – த ஹிந்து, பி.பி.சி, சி.என்.என்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள், மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், இம்முறை தேர்தல் வெற்றிக்கான காரணமென, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு மாகாண சபையின் வெற்றி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கிடைத்ததற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேலைத்திட்டங்களே பிரதான காரணமாக அமைந்ததென, அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது.
அத்துடன், மாகாண சபை தேர்தலில் எதிர்க்கட்சி பாரிய பின்னடைவிற்கு உட்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அரசியல் வேலைத்திட்டங்களுக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். சர்வதேசத்திற்கு இதன்மூலம் தெளிவான தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளதாகவும், அந்த வானொலி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் த ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச ரீதியில் சுமத்தப்படும் பல்வேறு விடயங்களுக்கு வெற்றிகரமான பதிலை வழங்குவதற்கு, தேர்தல் முடிவுகளினால் அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பி.பி.சி., சி.என்.என். போன்ற ஊடக நிறுவனங்களும், இலஙகை தேர்தல் தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்திற்கும் பொது மக்களுக்கும் இடையிலான உறவுகள், இம்முறை தேர்தல் முடிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாக, அவை குறிப்பிட்டுள்ளன.
0 comments :
Post a Comment