குண்டு தாக்குதலுக்கு இலக்காகும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களின் வீடுகள்
கல்முனையில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் இருவரின், வீடுகள் இன்று அதிகாலை இனந்தெரியாத குழுவினரின் குண்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரானர ஏ.எல்.அப்துல் மஜீட்டின் சாய்ந்தமருதில் உள்ள இல்லத்திற்கும், கல்முனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் இல்லத்திற்குமே இவ்வாறு குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment