யதார்த்த நிலையை புரிந்துகொண்டு த.தே.கூ தெரிவுக்குழுவில் பங்கேற்பது கட்டாயம்
நாட்டின் சட்டதிட்டங்கள் இயற்றப் படுவது பாராளுமன்றத்தில் என்பதை அவர்கள் உணரவேண்டும்
நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு யதார்த்த பூர்வமான தீர்வுகளை காண தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளு மன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பது கட்டாயமென அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டாலும் தீர்வுக்கான விடயத்தில் இலங்கை பாராளுமன்றத்தையே நாடவேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நீண்ட காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கு சென்று பேச்சுவார்தைகளை முன்னெடுப்பதாவும், அது புதிய விடயமில்லை எனவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யதார்த்த நிலையை புரிந்துகொள்ள வேண்டுமெனவும், பாராளுமன்றத்தின் தெரிவுக்குழவின் ஊடாகவே தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமெனவும், அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் சட்டதிட்டங்கள் இயற்றப்படுவது பாராளுமன்றத்தில் என்பதை அவர்கள் உணரவேண்டுமெனவும், அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்திற்கே காணப்படுவதாகவும் அமைச்சர் தினேஸ் குணர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை எஸ்.ஜே.பி செல்வநாயகம் உள்ளிட்ட தலைவர்களின் அகிம்சை ரீதியான போராட்டங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் தினேஸ் குணர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment