உலக நீதிமன்றத்திற்கும் செல்ல தயாராம் - ஆதிவாசிகளின் தலைவர்
இலங்கை ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னில அத்தா, மகியங்கனை நீதவான் நீதி மன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிணை பெற்று வெளியில் வந்த பின்பு நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ஆதிவாசிகளின் தலைவர்களில் நீதி மன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட முதலாவது ஆதிவாசித் தலைவன் நான்தான் என்றும், நான் இது பற்றி கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வேடர் பரம்பரைக்குச் சொந்தமானவற்றை பிறர் அபகரிகின்றார்கள் என்றும், அதை தான் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஆதிவாசி மக்களின் உரிமைக்காகப் போராட உலக நீதி மன்றத்துக்கும் செல்வதற்குத் தான் பின்நிற்கப் போவதிலை என்றும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment