Monday, September 17, 2012

புத்திஜீவிகளை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன

புத்திஜீவிகளின் தேவை நாட்டிற்கு தேவைப்படும் ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது நாட்டுக்கு எதிரான சூழ்ச்சியில் ஒரு அங்கம் எனவும், அது தொடர்பாக அனைவரும் புத்திசாதுரியத்துடன் ஈடுபட வேண்டுமென அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதல் காரணமாகவே இது போன்ற பகிஷ்கரிப்புகள் இடம்பெறுகின்றன என்றும், இச்சக்திகள் எமது புத்திஜீவிகளை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு முனைகின்றனர் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது எனவும், நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி பெரும் அழிவுகளை ஏற்படுத்துவதற்கு இவர்கள் முனைகின்றனர். எனவே அதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும், புத்தி ஜீவிகள் புத்திசாலிகளாக நடந்து கொள்வதன் மூலமே இலங்கையில் தற்போதுள்ள நிலைமையை மாற்றியமைக்கலாம் எனவும், தெரிவித்துள்ளார்

மாத்தறை குமாரதுங்க முனிதாச பொது நூலகத்தின் பொன்விழாவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தென்மாகாண சபையின் அனுசரணையில் இந்நூலகத்திற்கு நூல்களும் அன்பளிப்பு செய்யப்பட்டன. மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா உள்ளிட்ட பலர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com