பொலிஸ் கொஸ்தாபலுக்கு காது வெடிக்க கொடுத்தார் நீதிபதி!
நீதிபதியொருவரின் வீட்டில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ்காரரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்சை தலைமையக பொலிஸார் விசாரணைகளை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
இரவில் நீதிபதியின் வாகனம் வீட்டுக்கு வந்த போது, கேற்றைத் திறக்கத் தாமதமானதால் நீதிபதி தூசணத்தில் பேசி தன்னைக் கன்னத்தில் அடித்ததாக குறிப்பிட்ட பொலிஸ்காரர் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக நீதிபதியின் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறு இரண்டு பொலிஸாரைத் தாக்கியது தொடர்பாகவும் குறிப்பிட்ட நீதிபதிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment