இலங்கை-இந்திய உறுவு உறுதியானது! ரணில் விடும் கதை வேடிக்கையானது! –அமைச்சர் பசில்
இந்திய-இலங்கை உறவு உறுதியான அடித்த தளத்தில் அமைந்துள்ளது என்றும், அவ்வப்போது சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், இந்திய-இலங்கை உறவு உறுதியாக காலூன்றியுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மவ்பிம பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கிடையே பிளவை உருவாக்க சில சக்திகள் முயல்வதாகவும், எனினும் இரு நாடுகளும் அவற்றை முறியடித்து வருகின்றன என்றும், ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியாவுக்குப் போக ஆயத்தமாகும் சமயத்தில் எல்லாம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முந்திக் கொண்டு அங்கு போய், ஜனாதிபதியை அழைக்கும் முன்பு இந்தியா தன்னை அழைத்தது என்று கதை கட்டிவிடுவார் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வர்த்தக மற்றும் கைத்தொழில் உறவுகள் இருநாடுகளுக்கும் இடையில் சிறப்பாக இருதப்பதாகவும், கபிலவஸ்து புனித சின்னங்களை இந்தியாவுக்கு வெளியில் அனுப்பவதில்லை என்ற கொள்கை இருந்தாலும், ஜனாதிபதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவை இங்க கொண்டு வரப்பட்டன எனறு அமைச்சர்பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment