பாண்டிருப்பு திரௌபதை அம்மன் (தீப்பள்ளயம்) கொடியேறியது.
கிழக்கில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தல், கொடியேற்றம் முதலிய கிரியைகளுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 18 தினங்கள் நடைபெறும் இவ்வாலய உற்சவத்தில் சிகரமாய் விளங்கும் தீ மிதிப்பு வைபவம் எதிர்வரும் 28 திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
உற்சவ நாட்களில் முக்கிய திருவிழாக்களாக 17ம் திகதி திங்கட்கிழமை சுவாமி எழுந்தருளப்பண்ணல், 12ம் திகதி சனிக்கிழமை கலியாணக்கால் வெட்டுதல், 26ம் திகதி புதன்கிழமை பஞ்சபாண்டவர் திரௌபதை சகிதம் வனவாசம் செல்லல், 27ம் திகதி வியாழக்கிழமை அருச்சுணன் தவநிலை செய்தல், 28ம் திகதி வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்று 29ம் திகதி சனிக்கிழமை பால்பள்ளயத்துடன் உற்சவம் நிறைவுபெறும்.
நடைபெற்ற திருக்கதவு திறத்தல் கொடியேற்றம் ஆகிய நிகழ்வுகளின் போது பிடிக்கப்பட்ட படங்களையும் காணலாம்.
0 comments :
Post a Comment