நீதிமன்றத்தில் தலையிடும் தேவை தனக்கு இல்லை
நீதிமன்றத்தில் தலையிடும் தேவை, தனக்கோ, தனது அரசாங்கத்திற்கோ இல்லையென, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதிச்சேவை ஆணைக்குழு தொடர்பாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் குழுக்கள் மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் தொடர்பாக, இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதம ஆசிரியர்களின் சந்திப்பில், உரையாற்றும்போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
தான், 19 வருடங்களாக சட்டத்துறையில் ஈடுபட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பாக, தமக்கு போதிய புரிந்துணர்வு இருப்பதாக, சுட்டிக்காட்டினார். சட்டவாக்கத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வும், தொடர்புகளும் இருப்பதாகவும், தானும், தமது அரசாங்கமும், தொடர்ந்தும் நீதிக்கு தலைவணங்கி வருவதாகவும், ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
சட்டத்துறையின் உயர் அதிகாரிகள், ஜனாதிபதியை சந்திப்பது தொடர்பாக, ஒரு சில ஊடகங்கள் மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் தொடர்பாகவும், ஜனாதிபதி இங்கு கருத்துகளை முன்வைத்தார். நீதித்துறையின் உயர்மட்ட அதிகாரிகள், அடிக்கடி தமது தேவை மற்றும் நீதித்துறை தொடர்பான விடயங்கள் குறித்து, ஜனாதிபதி என்ற வகையில், தன்னை சந்திப்பது, ஆச்சரியத்திற்குரிய விடயமல்லவென்றும், ஜனாதிபதி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment