அரசியலில் குதிக்கின்றார் சந்திரிகாவின் மகன் விமுக்தி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மகனும், எஸ்.டப்.ஆர்.டி பண்டார நயக்காவின் பேரனுமான விமுக்து குமாரதுங்க அரசியலில் இறங்க ஆரம்பித்துள்ளதாகத் தெரியவரு கின்றது.
26 ம் திகதி தனது தாத்தாவின் 53 து நினைவு தினத்தில் ஹொரக்கொல்லையில் உள்ள சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனது தாயார், மற்றும் பெரிய தாயார் சுனேத்திராவுடன் வருகை தந்திருந்த பேதே இவர் அரசியலில் குதிப்பதற்கு ஆர்வமாக உள்ளார் என தெரியவந்துள்ளது. தற்போது இவர் இங்கிலாந்தில் மிருக வைத்தியராக அவர் கடமையாற்றுகினறார்.
மேற்படி அஞ்சலி நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் ரட்னசிரி விக்கிரமநாயக்க, மங்கள சமரவீர உட்பட பெருந்திரளான ஆளுங்கட்சி எதிர்க்கட்சி சந்திரிகா ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment