தேர்தலுக்கு பயந்து தேர்தலை ஒத்தி வைத்த அத்தியாயம் மறைந்துவிட்டது- கெஹெலிய
தேர்தலுக்கு பயந்து தேர்தலை ஒத்தி வைத்த அத்தியாயம் மறைந்து விட்ட தாகவும், மக்களை எந்நேரத்திலும் சந்திக்கும் வகையில் அரசாங்கம் மக்களுக்கான நடவடிக்கைளை மேற் கொண்டுள்ளது என கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கண்டி பலகொல்லையில் பல்தேவை கட்டிடம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தேர்தல் தொடர்பாக எம்மிடம் அச்சமில்லை. அதன் காரணமாகவே நாங்கள் உரிய காலத்திற்கு முன்னரே தேர்தலை எதிர்கொள்கின்றோம். மக்களுக்கு சேவையாற்றியுள்ளோம். அவர்களை சந்திப்பதில் அச்சம் இல்லை. யாருக்கும் அடிப்பணியாத தலைவர் ஒருவர் இருக்கின்றார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதனால் தான் நாங்கள் உரிய காலத்தில் நாங்கள் தேர்தலை நடத்துகின்றோம். பிரபாகரனின் இரும்பு பிடியில் சிக்கியிருந்த மக்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டு அவர்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளை நாங்கள் உருவாக்கி கொடுத்துள்ளோம். ஆகவே தேர்தலுக்கு பயந்து, தேர்தலை ஒத்தி வைத்த யுகம் தற்போது முடிந்து விட்டது. நாங்கள் மக்களுக்கு சேவையாற்றுகின்றோம். அதனால் மக்களை சந்திக்கின்றோம். மக்கள் ஆணையை பெற்றுக் கொள்கின்றோம். இதுதான் மஹிந்த சிந்தனையாகும் என தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க, மாகாண சபை அமைச்சர் லின்டன் விஜேசிங்க, உள்ளிட்ட பலரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர.
0 comments :
Post a Comment