சொக்லேற்றிக்குள் பிளேட்! சாப்பிட்டவர் மருத்துவ மனையில் - மினுவாங்கொடையில் சம்பவம்
கடையில் இருந்த சொக்லேற் ஒன்றை வாங்கி சாப்பிட்டபோது, அச்சொக்லேற் றிக்குள் இருந்த பிளேட்டை விழுங்கி யதால், நுகர்வோர் அதிகாரசபை உத்தியோகத்தர் ஒருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சொக்லேற் ஒன்றை, மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் இருந்து நுகர்வோர் அதிகாரசபை உத்தியோகத்தர் ஒருவர் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
அதன்போது தனது தொண்டையில் ஏதோ அசாதாரண பொருள் செல்வதை உணர்ந்த மேற்படி நபர், சொக்லேற்யை பரிசோதனை செய்த போது, பிளேட் துண்டென்று சொக்லேற்றில் இருந்ததை கண்டுபிடித்துள்ளார் என நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் நயாகம் சந்திரரட்ண பள்ளேகமதெரிவித்துள்ளார்.
பிளேட்டை துண்டை விழுங்கிய நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment