இறைமை மிக்க இலங்கையின் உள்விவகாரத்தில் வெளிநாடு தலையிடுவது நல்லதல்ல- ரஷ்யா
இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, மீள்குடியேற்றப் பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்று ள்ளமை, பாராட்டத்தக்கதென, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சிறப்பாட்சி தொடர்பான தூதரக அதிகாரி கொன்ஸ்டன் பின் டொல்கோப் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் பூஸா முகாமுக்கு விஜயம் செய்தேன். அங்கு புனர்வாழ்வுப் பணிகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன. சர்வதேச தரத்திற்கமைவாக அங்கு புனர்வாழ்வு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றதை, நான் அவதானித்தேன். இலங்கையில் மீள்குடியமர்த்தும் பணிகளும், வெற்றிகரமாக இடம்பெறுகின்றன. அத்துடன் தற்போது இலங்கையில் பூரண அமைதி நிலவுகின்றது என தெரிவித்தார்.
அத்துடன் விசேடமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், இலங்கை மீண்டுமொரு புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும். இலங்கையில் ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஒரு நாடொன்றின் உள்விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடுவது பொருத்தமற்றதென, என்னால் துணிந்து கூற முடியும். இலங்கை ஒரு இறைமைமிக்க நாடு. தனது பிரச்சினையை தானே தீர்த்துக்கொள்ளும் திறமை இலங்கைக்கு இருக்கின்றது. இலங்கையில் பயங்கரவாதம் தோல்வியடையச்செய்யப்பட்டதன் பின்னரே, இவை யாவும் இடம்பெற்றுள்ளன. உண்மையிலேயே, இதுவொரு வரவேற்கத்தக்க விடயம் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment