Thursday, September 6, 2012

அடுத்தாண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றால் சந்திரிகா போட்டியிடலாம்.

நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பின்படி, ஜனாதிபதி தேர்ந்தெடுக் கப்பட்டு நான்கு வருடங்களின் பின்னர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடாத்த முடியும். அதன் படி 2013 ல் ஜனாதிபதி தேர்தல் நடாத்த வாய்ப்பிருப்பதாக தெரியவருகின்றது. அவ்வாறான நிலைமை ஏற்படும் பட்சத்தில், பொது எதிர்க்கட்சி வேட்பாளராக சந்திரிகா பண்டாராயக்கா குமாரதுங்கவை நிறுத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் கசிகின்றன.

இது தொடர்பாக வெளிநாட்டு தூதரக அலுவலகத்தினர், மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு இடையே இரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், சந்திரிகா போட்டியிட முன் வந்தால் அரசிலில் வெறுப்புற்றிருக்கும் சிரேஷ்ட அமைச்சர்கள், தமிழர் தேசிய கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் பொன்சேகா கட்சியினர் ஆகியோரின் ஆதரவு கிடைக்கும் என்று அறிய முடிகின்றது.

No comments:

Post a Comment