முக்கிய அதிகாரிகளின் இறப்பர் முத்திரைகளை வைத்திருந்த ஐ.தே.கட்சி உறுப்பினர் கைது.
முக்கிய அதிகாரிகளின் இறப்பர் முத்திரைகளை வைத்திருந்த, ஐ.தே.கட்சியின் மொரட்டுவை மாநகரசபை உறுப்பினர் ஒருவரை, கல்கிஸை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த நபர், முக்கிய அதிகாரிகள் பலரின் இறப்பர் முத்திரைகளையும், போலி காணி உறுதிப்பத்திரங்களையும் வைத்திருந்ததாகவும், கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மொரட்டுவை மாநகரசபை ஆணையாளர், தனியார் வீடமைப்பு நிறுவனப் பணிப்பாளர், ஆகியோரின் இறப்பர் முத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment