பாக்கு நீரிணையில் மீனவர்களைப் பாதுகாக்க என்ன செய்துள்ளீர்கள்? – சென்னை உயர்நீதி மன்றம்.
பாக்கு நீரிணையில் இலங்கைப் படைகளால் தாக்கப்படும் இந்திய மீனவர்களைப் பாதுகாக்க, இந்திய கரையோரப் பாதுகாப்பு படையினர் எதிர்காலத்தில் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்தும், மற்றும் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், சத்தியக் கடிதம் ஒன்றை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
மீனவர்களைப் பாதுகாக்குமாறு செய்யப்பட்டிருந்த ஒரு தொகை முறைப்பாடுகளை விசாரணை செய்யும் நீதிபதிகள் வினோத் கே. சர்மா, ஏ. செல்வம் ஆகியோர், மத்திய அரசும், மானில அரசும் இலங்கை கடற்பகுதிக்குள் மீனவர்கள் செல்வதையும், அதனால் அவர்கள் இலங்கைப் படையால் தாக்கப்படுவதையும், தவிர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்பதை விபரமாகச் சமர்ப்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.
அத்துடன், "பன்னாட்டுக் கடல் எல்லைக் கோட்டைக் கடக்கமல் இருப்பதை நீங்கள் உறுதிசெய்யவேண்டும் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்" என்பதைக் கூறுங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment