வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை! நால்வர் கைது!
கொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கிருந்த நால்வரை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். குறித்த விபச்சார விடுதி அரசியல்வாதி ஒருவரின் இணைப்புச் செயலாளருடையது என தெரியவருகின்றது.
குறித்த விபச்சார விடுதியை நிர்வகித்த நபரையும், விபச்சாரத்தில் ஈடுபட்ட கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான பெண் ஓருவரையும், விபச்சார விடுதி நடாத்த உதவியாக இருந்த இரு பெண்களையும் கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட தேடுதலின் போதே குறித்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment