Thursday, September 13, 2012

லிபியா நோக்கி விரைகின்றது இரு அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்கள்.

இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் தயாரித்துள்ள சினிமா படத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி உலகம் முழுவதும் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் லிபியா தலைநகரம் பென்காசியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ராக்கெட் குண்டுகளை சரமாரியாக வீசினார்கள். இதில் அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் கொல்லப்பட்டார். மேலும் 3 அமெரிக்க தூதரக ஊழியர்களும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

தாக்குதல் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீண்டகாலமாகவே அமெரிக்காவுக்கு எதிராக பல அச்சுறுத்தல் உள்ளன. அதனால்தான் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளது. இந்த தாக்குதல் சம்மந்தமாக உரிய விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்டுவோம்.

அமெரிக்கா ஒருபோதும் அரபு மக்களுக்கோ, லிபியாவில் புதிய அரசுக்கோ எதிரானது அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தூதரகம் தாக்கப்பட்டதையடுத்து உலக நாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க தூதரகங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். லிபியாவில் உள்ள தூதரகம் தாக்கப்பட்டதை போல அரபு நாடுகளில் உள்ள தூதரகங்கள் தாக்கப்படலாம் என்று கருதி அமெரிக்க படைகள் உஷார் அடைந்து உள்ளன. ஏற்கனவே அரபு நாடுகளை சுற்றி 5 அமெரிக்க போர் கப்பல்கள் நிற்கின்றன.

லிபியாவில் நடந்த தாக்குதலையடுத்து மேலும் 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் அனுப்பி உள்ளது. யு.எஸ்.எஸ். லபூன், யு.எஸ்.எஸ். மெக்பால் ஆகிய 2 கப்பல்கள் லிபியாவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இரு கப்பல்களும் ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டதாகும். அவசர நிலை ஏற்பட்டால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.

No comments:

Post a Comment