காதலன் கைவிட்டதால் மனம் உடைந்த 19 வயது பெண் ஒருவர், பாலம் ஒன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதை கீழேயிருந்து அப்பெண்ணின் காதலர் படம் பிடித்திருக்கிறார் "நாளைக்கே நான்தான் கொலை செய்தேன்" என்ற குற்றச்சாட்டு வரக்கூடாது அல்லவா? அதுதான், அந்த பெண் பாலத்தில் இருந்து குதிக்கும் இறுதிக் கணத்தை போட்டோ பிடித்தேன் என்று முன்னாள் காதலன் பொலிஸில் கூறியுள்ளார்.
தற்கொலை செய்துகொண்டவர் பிரிட்டிஷ் பெண். பெயர், ஜோவான் க்ரிஃபித்ஸ். சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த இவருக்கு, காதலருடன் உறவு முறிந்து போனது. அதை அவரால் தாங்க முடியவில்லை.
ஜோவான் க்ரிஃபித்ஸ் சம்பவ தினத்தன்று மாலை, ஹாவர்ஃபோர்டு வெஸ்ட் பகுதியில் உள்ள பார் ஒன்றுக்கு சென்று நன்றாக குடித்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து, முன்னாள் காதலனும் பாருக்கு வந்துவிட்டார். அதுவாவது பரவாயில்லை. வந்த முன்னாள் காதலன், தமது இன்னாள் காதலியுடன் அல்லவா வந்துவிட்டார்.
இதையடுத்து ஜோவானுக்கும் முன்னாள் காதலருக்கும் இடையே வாக்குவாதம் துவங்கி, ஒரே கலாட்டாவாக போய்விட்டது. பாரில் இருந்து இருவரும் வெளியேற்றப்பட்டனர். உடனே ஓடிச்சென்ற ஜோவான், உயரமான பாலத்தில் ஏறி, தற்கொலை செய்ய போவதாக கத்தியிருக்கிறார். வீதியில் கூட்டம் கூடிவிட்டது. பொலிஸூம் வந்து சேர்ந்தது.
பாலத்தில் இருந்து குதிக்காமல் அவரை கீழே இறக்கும் வகையில் பேச்சுக் கொடுத்து அப்பொண்ணின் மனதை முயன்றார்கள். அவர் இறங்கி வருவதாக இல்லை. இதற்கிடையே இப்படியான விவகாரங்களில் 'பேசி வழிக்கு கொண்டுவரும் நிபுணர்' (specially trained negotiatorளி) அழைக்கப்பட்டார். ஆனால், அவர் வந்து சேர்வதற்குள், ஜோவான் பாலத்தில் இருந்து குதித்து விட்டார்.
விசாரணைக்கு அழைக்கப்படும் முன்னரே பொலிஸ் முன் ஆஜரான முன்னாள் காதலர், தமக்கும் ஜோவானுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முழுவதையும் செல்போனில் பதிவு செய்திருப்பதாக கொடுத்து, இறுதிக் கட்டத்தில் ஜோவான் தற்கொலை செய்ய குதித்தபோது எடுத்த போட்டோக்களையும் கொடுத்திருக்கிறார்.
தற்கொலை செய்யும்போது போட்டோ எடுத்தது ஜீரணிக்க முடியாத விஷயம்தான். ஆனால், இந்த வழக்கில் இருந்து அவர் (முன்னாள் காதலர்) சிக்கல் ஏதுமில்லாமல் வெளிவர இந்த ஆதாரமே போதுமானது' என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment