சில சட்டப் புத்தகங்கள் தமிழ் மொழிபெயர்ப்பின்றி இருப்பதால், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதி மன்றங்களில் மட்டுமன்றி நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களிலும், தமிழ் மொழியில் சட்டரீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அசௌகரியங்கள் காணப்படுவதாக மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து இந்த அசௌகரியங்களைத் நிவர்த்தி செய்யும் வகையில், பொறுப்புவாய்ந்த நிறுவனம் மற்றும் சட்டவாக்க பிரிவுடன் கலந்தாலோசித்து மிக முக்கியமான சட்ட நியமங்களை தமிழில் மொழி பெயர்த்து அச்சிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் மொழிசார்ந்த இனத்தினர். தமிழ்மொழி அழிந்தால் தமிழரும் இல்லாது போய்விடுவர். இலங்கையில் இன்று தமிழ் மொழியைக் காக்க விழைபவர் வாசுதேவ நாணயக்கார. அவர் எப்போதோ அமைச்சராக வந்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் தமிழர் பிரச்கினையே உருவாகி இருக்காது.
ReplyDeleteச.ஜேசுநேசன், சட்டத்தரணி.