அரச ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சட்டத்தரணிகள் சங்கம்.
அரச ஊடகங்களான ரூபவாகினி, ஐ.ரி.என் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்பன நீதித் துறையை அவமதிக்கும், மற்றும் கண்டனம் செய்யும் தோரணையிலான செய்திகளை வெளியிட்டு வருவதனால், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக சிரேஸ்ட சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்றை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நியமித்திருப்பதாக அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமது சுய நலத்துக்காக நீதித்துறையின் மீது கை வைக்க எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று அவர் குறிப்பிடுகின்றார். சட்டத்தரணிகள் சங்கத்தைப் பின்பற்றி எதிக்கட்சிகளும் தமது தாக்கத்தை ஆரம்பிக்கத் தலைப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment