பொலிஸாருக்கு உதவிய மடிக்கணினி படங்கள்.
மாத்தறை திகாகொடையில் கடந்த 18ம் திகதி தனது கெப் வாகனத்தில் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்ட இராணுவ மேஜர், தனது காதலியுடனும் காதலியின் தந்தை யுடனும், உல்லாசமாக சுற்றித் திரிந்தபோது எடுத்த படங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த இராணுவ மேஜர் தனது காதலி மற்றும் காதலியின் பெற்றோருடன் சேர்த்து எடுத்துக் கொண்ட 200க்கு மேற்பட்ட படங்களை, அவரது மடிக் கணினியில் இருப்பதை திகாகொடை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த மணிக் கணினியை காதலி என்று கூறப்படும் 17 வயது யுவதியின் தந்தையாரிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
யுவதியின் தந்தை ஒரு ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தராவார். இதேவேளை, யுவதியின் தந்தை குறித்த இராணுவ மேஜரை சம்பவத்துக்கு முன்னர் தான் பார்த்தில்லை என்றும், தந்தை தெரிவித்ததை போல தான் வகுப்புகளுக்குச் சென்றபோதுதான் அவரைச் சந்தித்ததாக யுவதியும் ஏற்கனவே பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்திருந்தனர்.
ஆனால், குறித்த யுவதியும் அவரது தந்தையும் அவர்களின் குடும்பத்துடன் யால வனவிலங்குப் பூங்கா, மற்றும் தெகிவளை விலங்கப் பூங்கா ஆகியவற்றுக்குச் மேஜருடன் சென்றிருப்பதை கணினியில் உள்ள படங்கள் காட்டுகின்றன.
மேஜரின் இறுதிச் சடங்குகள் 26 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குறித்த இராணுவ மேஜர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய கட்டுரையை இலங்கை நெற் கடந்த 20ம் திகதி பிரசுரித்திருந்தது
0 comments :
Post a Comment