Wednesday, September 26, 2012

இனியும் அமெரிக்காவின் உருட்டல், மிரட்டல் எடுபடாது... ஈரான் அதிபர் அகமதிநிஜாத்

நியூயார்க்: அமெரிக்காவின் மிரட்டல்கள் இனியும் உலகில் எடுபடாது. தனது மிரட்டல்களை, நெருக்குதல்களை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும். புதிய உலக வரிசை உருவாவதற்கான நேரம் வந்து விட்டது என்று கூறியுள்ளார் ஈரான் அதிபர் அகமதிநிஜாத். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக

வந்துள்ள அகமதிநிஜாத் அங்கு அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர 12க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து முயற்சித்து வருகின்றன. அதில் ஒன்றாக ஈரானும் உள்ளது.

எங்களது அணு சக்தித் திட்டங்களை கேள்வி கேட்கயாருக்கும் அதிகாரம் கிடையாது. மேற்கத்திய நாடுகள் என்னதான் எங்களுக்குத் தடை விதித்தாலும் எங்களது பணிகள் தொடர்ந்து தங்கு தடையின்றி நடந்து கொண்டுதான் உள்ளன.

இப்போது புதிய உலக வரிசை உருவாகும் நேரம் வந்து விட்டது. இனியும் அமெரிக்காவின் உருட்டல்கள், மிரட்டல்கள் எடுபடாது. அவர்களும் உலக நாடுகள் மீதான தங்களது ஆதிக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று எல்கேஜி குழந்தைக்குக் கூட அமெரிக்கா உலக நாடுகளை மிரட்டிக் காரியம் சாதிப்பதை உணர்ந்துள்ளது. மைக்ரோபோன் மூலம் உத்தரவிட்டு காரியம் சாதிக்கிறது அமெரிக்கா. தங்களது விருப்பங்களை, மிரட்டல்களை போன் மூலம் அவர்கள் சாதிக்கி நினைக்கிறார்கள். ஆனால் இது முடியப் போகும் நேரம் வந்து விட்டது. இனிமேலும் அவர்களை யாரும் சக்கரவர்த்தி போல பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை.

ஆதிக்கம் முடிவுக்கு வர வேண்டும், ஆக்கிரமிப்பு முடிவுக்கு வர வேண்டும், கட்டளைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்றார் அகமதிநிஜாத்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com