இலங்கைக்கு உதவுவது, சர்வதேச சமூகத்தின் கடமையாகும் - டஸ்மானியா
பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்து முன்னேற்றப்பாதையில் செல்லும் இலங்கைக்கு உதவுவது, சர்வதேச சமூகத்தின் கடமையென, டஸ்மானியா பாராளுமன்ற உறுப்பினர், பொதுநலவாய அமைப்பு மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
டஸ்மானியா பாராளுமன்றத்தின் உறுப்பினரான ஜெக்லைன் பெட்ரெஸ்மா, பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் 58வது அமர்விற்கு இணைவாக நடைபெறும் முன்னோடி கூட்டத்திலேயே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் பயங்கரவாதம் தற்போது வரலாற்று பதிவாக மாறிவிட்டதாகவும், தற்போது அனைத்து தரப்பினரும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில், அவதானம் செலுத்த வேண்டுமென்றும், டஸ்மானிய பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினரான ஜெக்லைன் பெட்ரெஸ்மா தெரிவித்தார்.
வர்த்தக பிரச்சினைகள் மட்டுமல்லாமல், பயங்கரவாதம், பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக, மாநாட்டில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
நேற்று கொழும்பில் ஆரம்பமான இவ்வமர்வில், பங்கேற்ற வெளிநாட்டு பிரதிநிதிகளை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வரவேற்றார்.
0 comments :
Post a Comment