வரலாற்று ரீதியிலான நட்புறவை மேலும் உறுதிப்படுத்துவது எவ்வாறு?
இந்திய, இலங்கை ஜனாதிபதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றன. இந்தியாவிற்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று மாலை அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையான இராஸ்டபதி பவனில் சந்தித்தார்.
ஜனாதிபதி உட்பட இலங்கை தூதுக்குழுவினரை இந்திய ஜனாதிபதி வரவேற்றதன் பின்னர் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையின் தற்போதைய பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகள் பாராட்டத்தக்கதென இந்திய ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக தனக்கு தெளிவு இருப்பதாக தெரிவித்த இந்திய ஜனாதிபதி, இது குறித்து தனது மகிழ்சியை வெளியிட்டார். வடக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றல் உட்பட மீள்குடியேற்றம் தொடர்பாகவும், இந்திய ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பாக இந்திய ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.
ஜனாதிபதி அங்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்று ரீதியிலான நட்புறவு பாதிப்படைய இடமளிக்க முடியாதென தெரிவித்தார். அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்தியா வழங்கும் ஆதரவு குறித்து ஜனாதிபதி இந்திய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார். வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உட்பட அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment